வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சிநிலையத்தில்சமையலர் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சிநிலையத்தில்சமையலர் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-22 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமையலர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சமையலர் வேலை

தூத்துக்குடி புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹீம். இவருடைய மகன் முகம்மதுகான் (வயது 37). இவருக்கும், வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி சங்கரப்பேரி, ஹவுசிங் போடு காலணியைச் சேர்ந்த செந்தில்நாயகம் மகன் மாரியப்பன் (47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, மாரியப்பன், தான் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணியாற்றி வருவதால் தனக்கு அதிக பழக்கமும், செல்வாக்கும் இருப்பதாகவும், அதனால் வேப்பலோடை தொழிற்பயிற்சி மையத்தில் ரூ.2 லட்சம் கொடுத்தால் சமையலர் வேலை வாங்கித்தர முடியும் என்று கூறி உள்ளார். இதனை நம்பிய முகம்மது கான் கடந்த 13.01.2021 அன்று மாரியப்பனின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் பணத்தை டெபாசிட் செய்து உள்ளார்.

கைது

பணத்தை பெற்றுக்கொண்ட மாரியப்பன் வேலை வாங்கித்தராமல் காலம் தாழ்த்தி உள்ளார். இந்த நிலையில் மாரியப்பன் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு மாறுதலாகி சென்று விட்டாராம். அதன்பிறகு மாரியப்பனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகம்மதுகான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த மாரியப்பனை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாரியப்பன் இது போன்று பலரிடம் பணம் பெற்று, ரூ.62 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்