வேன் கவிழ்ந்து 11 பக்தர்கள் காயம்

திட்டக்குடி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பக்தர்கள் காயமடைந்தனர்.

Update: 2022-12-31 18:45 GMT

ராமநத்தம், 

திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் கிராமத்தை சேர்ந்த சிலர் விரதம் மேற்கொண்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் சென்றனர். பின்னர் நேற்று மாலை, வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, தி.இளமங்களம் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த சாமிதுரை மனைவி ஜெயந்தி (வயது 40), சாமிதுரை மனைவி சுசிலா (39), அறிவழகன் மனைவி கவிதா (35), தியாகராஜன் மனைவி காயத்ரி (25), நாகராஜன் மனைவி மகேஸ்வரி (35), ராஜதுரை மகன் முத்து (50), வதிஷ்டபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்