மோட்டார்சைக்கிள்மீது வேன் மோதி ஒருவர் பலி

சோளிங்கர் அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி ஒருவர் பலியானார்.

Update: 2023-10-25 06:45 GMT

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் மோட்டார் சைக்கிளில் துரை (54) என்பவரை ஏற்றிக்கொண்டு, கொடைக்கல் கிராமத்திலிருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துக்குமார், துரை ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற போது முத்துக்குமார் வழியிலேயே இறந்துவிட்டார். துரைக்கு கிச்சை அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்