காரைக்குடி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலாரின் இறையன்பு தொண்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம் அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்ஒரு பகுதியாக காரைக்குடி முத்து மாரியம்மன் கோவிலில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் வழிகாட்டுதலின் பேரில் காரைக்குடி நகர்மன்ற முத்துத்துரை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலையில் வள்ளலார் அன்னதான விழா தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர் மன்ற துணை தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது சித்திக், மங்கையர்கரசி, கார்த்திகேயன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி டாக்டர் பிரபாவதி, தி.மு.க. வர்த்தக அணி ராகோ அரசு சரவணன் மற்றும் வள்ளலார் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.