கூடலூர்
கூடலூர் கோழிப்பாலம் கடைவீதியில் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
ரவிக்குமார் தலைமை தாங்கினார். ரபீக் வரவேற்றார். அசைன் காதலர் தின அடையாளமாக பலூன்களை பறக்க விட்டார். முடிவில் நவுப்ல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அப்பு, சிவா, பாபு, அனீஸ், முஹம்மது பயாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.