கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

Update: 2023-01-02 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5-45 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனை, உற்சவருக்கு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும், தொடர்ந்து கோவிலின் வெளிபிரகாரத்தில் தெப்பக்குளத்தை சுற்றி 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பெருமாள் சப்பரத்தில் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் வலம் வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்