கோவையில் வைகோவின் ஆவண படம் வெளியீடு

வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை குறித்து மாமனிதன் வைகோ என்ற ஆவண படம் வெளியிடும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது

Update: 2022-09-27 18:45 GMT


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை குறித்து மாமனிதன் வைகோ என்ற ஆவண படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கோவையில் இந்த ஆவணபடம் வெளியிடும் நிகழ்ச்சி கே.ஜி.ராகம் தியேட்டரில் நேற்று நடந்தது. ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேசினார்.

இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசியபோது, தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து 56 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் நேர்மையாக, தூய்மையாக முழங்கியவர் வைகோ.

இந்த ஆவணபடம் பொதுவாழ்க்கையில் தூய்மையாக மக்கள் பணியாற்றுவது எப்படி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். பதவிக்காக பணியாற்றாமல் மக்களுக்காக வைகோவின் குரல் ஓங்கி ஒலித்தது.

அதை இந்த படம் மூலம் மக்கள் பார்த்து தெரிந்து கொள்வார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மேயர் கல்பனா, முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜ் மற்றும் டி.ஆர்.சண்முகசுந்தரம், கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சரத், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் குகன்மில் செந்தில், பி.என்.ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, சித்ரா தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்