ராஜ பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாகம்
வாசுதேவநல்லூர் ராஜ பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாக விழா நடந்தது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் ராஜ பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் முருகப்பெருமானுக்கு 21 வகை அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பட்டாடை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.