வேம்படி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

வேம்படி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

Update: 2023-06-08 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வேம்படி மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், அக்னி கப்பரை எடுத்தல் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழா நிறைவு நாளில் வேம்படி மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்