அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா

கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா

Update: 2023-05-26 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சாமி ஒரு முகம், ஆறு திருக்கரங்களுடன் தனி சன்னதி கொண்டு பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழாவை கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன், கோடியக்காடு ஊராட்சி மன்றதலைவா் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 2-ந் தேதியும், வைகாசி விசாக பெருவிழா 3-ந் தேதியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்