கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 36-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 1,310 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடந்தன. இதில் பொதுமக்கள் முதலாவது கொரோனா தடுப்பூசி, 2-வது கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி ஆகியவை போட்டு கொண்டனர். மொத்தம் 29 ஆயிரத்து 10 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.