வெறிநோய் தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2023-03-11 18:45 GMT


சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன், உதவி இயக்குனர் டாக்டர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தடுப்பூசி முகாமில் கால்நடை டாக்டர்கள் சங்கரலிங்கம், முகுந்தன், சித்தார்த், பவித்திரன், ஆய்வாளர்கள் மற்றும் கால்நடைதுறை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் பொதுமக்கள் கொண்டு வந்த செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசியை செலுத்தி விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கினார்கள்..

Tags:    

மேலும் செய்திகள்