கூடுதல் போலியோ தடுப்பூசி திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதல் போலியோ தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

Update: 2023-01-04 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதல் போலியோ தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

போலியோ தடுப்பூசி

குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும். பிறந்த குழந்தைகளுக்கு 2 தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த நிலையில் மத்திய அரசு 9-வது மாதம் முதல் 12-வது மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தடுப்பூசி போடும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கூடுதல் போலியோ தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கியது.

832 குழந்தைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 270 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அங்கன்வாடி மையங்களில் இந்த போலியோ தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் டாக்டர்கள், செவிலியர் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பபட்டு போலியோ தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 832 குழந்தைகளுக்கு கூடுதல் தவணை போலியோ தடுப்பூசி போடப்பட்டது. இனிவரும் காலங்களில், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 9 மாதம் முதல் 12 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தவணை தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்