காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Update: 2023-07-30 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் ஜூலியஸ், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஈவேரா கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டு அதற்கான ஏற்பு அறிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் பணி நாள் முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தி காலதாமதம் செய்வதை தவிர்த்து உடனடியாக தடையின்மை சான்று வழங்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வி சான்றுகளுக்கு உண்மைத்தன்மை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை இருந்தும் குடவாசல் உள்ளிட்ட வட்டாரங்களில் அலட்சியத்தால் மறைக்கப்பட்ட காலியிடங்களை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூட்டத்தில் முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டாரங்களின் உறுப்பினர் சேர்க்கைகளை முடித்து பட்டியல், அடிக்கட்டு, தொகை ஆகியவைகளை வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்வாணன், செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்