ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்கள் கோர்ட்டு உத்தரவுக்குப் பின்னர் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோர்ட்டு உத்தரவு வந்ததும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-28 16:29 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள காசநோய் பரிசோதனை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான 1,021 மருத்துவர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் கொரோனா காலத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோர்ட்டு உத்தரவு வந்ததும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்