வேளாண் எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - அதிகாரி தகவல்

வேளாண் எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - அதிகாரி தகவல்அறுவடை எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-12 09:10 GMT

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது பரவலாக நெல் அறுவடை நடைபெற்று வரும் சூழலில், நெல் அறுவடை எந்திரங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு எந்திரங்கள் பயன்படுத்தி அறுவடை செய்வதால் குறிப்பிட்ட காலத்திற்குள் அறுவடை பணிகள் முடிக்கப்படுவதுடன் தானியங்களின் விரயத்தையும் தவிர்க்கலாம். இது தவிர அறுவடை செலவும் குறைய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் விவசாய பெருமக்கள் இடையே இவ்வாறான எந்திரங்கள், அதன் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள் தொடர்புடைய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இடைத்தரகர்களை அணுக வேண்டி உள்ளது.

இதனை தவிர்க்க வேளாண் பொறியியல் துறை மூலம் மாநிலம் முழுவதும் நெல், மக்காச்சோளம், பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் ஆகிய பயிர்களின் அறுவடைக்கு பயன்படும் அறுவடை எந்திரங்கள் பற்றிய தகவல்களான உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்கள் மாவட்ட வாரியாகவும் வட்டார வாரியாகவும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் உழவன் செயலியில் ''வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு'' என்ற முகப்பை தேர்வு செய்து ''அறுவடை எந்திரங்கள் பற்றி அறிய'' என்ற துணை முகப்பின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து, அறுவடை எந்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் பெற்று பயனடையுமாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்