பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு:5 கடைகளுக்கு அபராதம்

தேனி அருகே பூதிப்புரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-12 18:45 GMT

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் பேரூராட்சி அலுவலர்கள் பூதிப்புரத்தில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை செய்தனர். 8 கடைகளில் சோதனை நடத்தினர். அதில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1,300 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்