தோட்டக்கலைத்துறையின் திட்டங்களை பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்

தோட்டக்கலைத்துறையின் திட்டங்களை பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-05-05 18:33 GMT

கரூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையில் 2023-24-ம் ஆண்டு பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறையின் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற இயலும். பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயனடைய https://tnhorticulture.tn.gov.in:8080 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து பயன் அடையாலம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்