நகர்ப்புற நலவாழ்வு மையம்

ஆரணி நகரில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2023-06-07 11:44 GMT

ஆரணி

ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை மூலம் புதிய நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடம் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டது.

இப்பணிகள், முடிவடைந்ததையொட்டி நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் நகர்புற நலவாழ்வு மையம் கட்டிடத்தில் தொடக்க விழா நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம், ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தணன், நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், பவதாரணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் வரவேற்றார்.

நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கான கிட்டுகளையும் வழங்கினார்.

இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் கு.விநாயகம், இஸ்ரத்ஜபீன் அப்சல், அரவிந்தன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித், சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்