சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ பதிவேற்றம்; வாலிபர் கைது
சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே உள்ள செங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்து என்ற அன்னியன் (வயது 20). இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்தில் பிரச்சினையை தூண்டும் வகையில், அரிவாளுடன் இருக்கும் வீடியோவை வைத்து பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துவை கைது ெசய்தனர்.