புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் வந்தன

திருச்சி பொன்மலையில் இருந்து புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் குன்னூருக்கு வந்தன.

Update: 2022-09-27 18:45 GMT

குன்னூர், 

திருச்சி பொன்மலையில் இருந்து புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் குன்னூருக்கு வந்தன.

மலை ரெயில்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. இந்த சீசனில் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை சீசனில் லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

டீசல் என்ஜின்கள்

குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இதில் 2 என்ஜின்கள் பராமரிப்பு பணிகளுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 2 டீசல் என்ஜின்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகள் நிறைவு பெற்றது.

இதையடுத்து குன்னூர் பணிமனைக்கு புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் நேற்று கொண்டு வரப்பட்டது.

முன்னதாக நீராவி பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் பெட்டி இணைக்கப்பட்டு, அதற்கு பின்னால் டீசல் என்ஜின்கள் இணைத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் 2-வது சீசன் தொடங்க உள்ளது. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்கும் போது இயற்கை காட்சிகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், வனவிலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். இதைெயாட்டி சுற்றுலா பயணிகள் வசதிக்கேற்ப புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜின்கள் மூலம் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

ேமலும் தடையின்றி மலை ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்