"எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை'' டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுக-வில் உள்ள யாருக்கும் விருப்பம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இல்லை. பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுக-வில் உள்ள யாருக்கும் விருப்பம் இல்லை. துரோகமும், ஏமாற்று வேலையும்தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நடைமுறையே. சிறுபான்மை மக்களையும் அதுபோல அவர் ஏமாற்றலாம்." இவ்வாறு அவர் கூறினார்.