ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-02 18:45 GMT

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.

நவீன தொழில்நுட்பம்

வால்பாறை-பொள்ளாச்சி சாலையானது மொத்தம் 64 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டது. இதில் 40 கிலோ மீட்டர் தூரமானது 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை ஆகும். இதை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள வாகனங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்வதுதான் வழக்கம்.

இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பராமரிப்பு பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக சாலையை அகலப்படுத்துவது, தேவைப்படும் இடங்களில் சிறு பாலங்கள் கட்டுவது, மண் ஏற்படுவதை தடுப்பது, குறுகலான இடங்களை விரிவுபடுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விபத்து ஏற்படும் இடங்கள்

இது தவிர அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள், பஸ்கள் எளிதில் திரும்பி செல்ல சிரமமாக இருக்கும் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகளுக்கான மதிப்பீடு தயார் செய்யப்படும் என்றும், வனப்பகுதிக்கு இடையூறு ஏற்படாமல் சாலை பணிகள் நடைபெறும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்