புதருக்குள் ஆண் பிணம்

பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையம் அருகே புதருக்குள் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-09 20:25 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை நகராட்சி பாப்பாவெளி பாளையங்கோட்டையில் தாலுகா போலீஸ் நிலையம் உள்ளது. அதன் எதிரே உள்ள ரோட்டு ஓரத்தில் புதருக்குள் நேற்று காலை ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. பிணமாக கிடந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுமதி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்