ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-03 18:45 GMT

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன்.நக்கீரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார். இதில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், மின் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை திரும்பப்பெற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்