மத்திய மந்திரி எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

மத்திய மந்திரி எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

Update: 2022-06-18 14:10 GMT

கோவை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னை செல்வதற்காக நேற்று மதியம் 2.40 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தார். பின்னர் அவர், விமான நிலையத்துக்குள் செல்ல பயணிகள் செல்லும் பாதையில் சென்றபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரிடம் பயணச்சீட்டு கேட்டு தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையில் விமானம் புறப்படும் நேரம் மாலை 4.10 மணிக்கு என்பதாலும், எல்.முருகன் 3.30 மணிக்கு வருவதாக இருந்ததாலும், அவருடைய பயணச்சீட்டை வாங்கி வைத்துக்கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் விமானநிலையத்துக்குள் காத்திருந்தார். ஆனால் எல்.முருகன் முன்கூட்டியே வந்ததால் பயணச்சீ்ட்டை வைத்திருந்தவருக்கு தெரியவில்லை. இந்தநிலையில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் அங்கு விரைந்து வந்து, எல்.முருகனை உள்ளே அழைத்து சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்