தொழிற்சங்க கொடியேற்று விழா
நெல்லை வண்ணார்பேட்டையில் தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது.
நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி கிளை பணிமனை முன்பாக பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக பெயர்ப்பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. சங்க கிளை செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மற்றும் பேரவை தலைவர் விமேஷ்வரன் தொழிற்சங்க கொடியேற்றினார். சங்க பெயர்ப்பலகையை பொதுச்செயலாளர் பாலன் திறந்து வைத்தார்.
பா.ஜ.க. மாவட்ட செயலாளர் டி.வி.சுரேஷ், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், பாரதீய மஸ்தூர் சங்க சட்ட ஆலோசகர் செந்தில்குமார், பேரவை அமைப்பு செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பொன்கிருஷ்ணன், துணைத்தலைவர் தேவானந்த், பி.எம்.எஸ். மாவட்ட பொறுப்பாளர் கிரிஜா, மண்டல தலைவர் மாரியப்பன், பொதுச்செயலாளர் செல்வன் ஆகியோர் பேசினார்கள். கிளை தலைவர் பாலகுரு நன்றி கூறினார்.