காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

Update: 2022-09-11 08:23 GMT

காஞ்சிபுரம்,

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் அவர் கலந்துகொண்டார்.

இதையடுத்து மத்திய நிதி மந்திரிக்கு கோவில் நிர்வாகத்தில் சார்பில் பாதாம், முந்திரி, ஏலக்காய், மாலை மற்றும் கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மத்திய நிதி மந்திரி கோவிலுக்கு வருவதையொட்டி இரண்டு மணி நேரத்துக்கு பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்