தேசிய கொடியுடன் ஒன்றிய கவுன்சிலர் குழு கூட்டம்

முதுகுளத்தூரில் தேசிய கொடியுடன் ஒன்றிய கவுன்சிலர் குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-12 18:44 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் (பொ) கண்ணகி ஜெகதீசன் தலைமை தாங்கினார். வட்டார அலுவலர்கள் ரவி, அன்பு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர் அர்ஜுனன் பேசுகையில் எங்கள் கிராமப் பகுதியில் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.. மேலும் பாரபட்சமின்றி திட்டப்பணிக்கு நிதி வழங்க வேண்டும் என கூறி கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். இதற்கு ஆணையாளர் ரவி கூறுகையில் போதுமான நிதி இல்லாததால் நிதி வந்தவுடன் திட்டப் பணிகளுக்கு எந்தவிதமான பாரபட்சமின்றி அனைத்து கவுன்சிலர்களுக்கும் முறையாக நிதி வழங்கப்படும் என தெரிவித்தார். கவுன்சிலர் சசிகலா கூறுகையில் எஸ்.ஆர்.என். பழங்குளம் கிராமத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு ஆணையாளர் ரவி கூடிய விரைவில் அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்