நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-26 17:57 GMT

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் வெண்மதி முனுசாமி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுகுமார், சித்ராகலா, துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புல்லூர் ஊராட்சியில் காந்தி நகர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி முதல் திருப்பதி வட்டம் வரை புதிய பைப் லைன் அமைத்தல், நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குப்பட்டு, தும்பேரி, புல்லூர், தகரகுப்பம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடம் மற்றும் மேற்கூரையை இடித்து விட்டு புதிதாக கட்டுவது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்