ஒன்றியக்குழு கூட்டம்

வந்தவாசியில் ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது

Update: 2023-08-14 11:36 GMT

வந்தவாசி

வந்தவாசியில் ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ந.ராஜன்பாபு, ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வந்தவாசி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்பார்வையிடாமல் பொறியாளர் பிரிவினர் காலம் தாழ்த்தி மெத்தனமாக செயல்படுவதால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று ஒன்றியக்குழு உறுப்பினர் ந.தனசேகரன் கூறினார்.

தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகளை குறித்து பேசினர்.

பின்னர் ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் பேசுகையில், ஒன்றியக்குழு உறுப்பினர்களின் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்