அடையாளம் தெரியாத முதியவர்கள் பிணம்

சாத்தூரில் 2 இடங்களில் அடையாளம் ெதரியாத முதியவர்கள் பிணத்தை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-19 19:03 GMT

சிவகாசி, 

சாத்தூரில் 2 இடங்களில் அடையாளம் ெதரியாத முதியவர்கள் பிணத்தை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் பிணம்

சாத்தூர் தாலுகாவில் உள்ள பெத்துரெட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஓடைப்பட்டி வன்னிவிநாயகர் கோவில் அருகில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் இருக்கன்குடி அருகே உள்ள மேலமடை கிராமத்தில் நீர்த்தேக்க கால்வாய் அருகில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் இறந்து கிடந்தது யார்? என தெரியவில்லை. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரன் இருக்கன்குடி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்