மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தூக்குப்போட்டு கணவர் தற்கொலை
தூக்குப்போட்டு கணவர் தற்கொலை
அந்தியூர் தவுட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யதர்ஷினி (18). கடந்த 1½ மாதத்துக்கு முன்பு வீட்டில் திவ்யதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மணிகண்டன் மிகவும் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.