கலெக்டர் அலுவலகத்தில் ஐ.நா. சபை கொடி ஏற்றி மரியாதை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஐ.நா. சபை கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.;

Update:2023-10-25 02:00 IST

1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டது. பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கல்வி, சுகாதாரம் இவற்றோடு தொடர்புடைய பணிகளையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், முழு வேலைவாய்ப்பை உருவாக்குதல், சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்றுதல் ஆகிய பணிகளுக்காக நிதி உதவிகளையும் ஐ.நா. சபை செய்து வருகிறது.

இதுபோன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளை பாராட்டும் விதமாகவும், நட்பை நினைவு கூறும் விதமாகவும் ஐ.நா. சபை ஆரம்பிக்கப்பட்ட நாளான அக்டோபர் 24-ந்தேதி ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இதையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை இளம் நீல நிறத்தின் நடுவே வெள்ளை வட்டத்தை சின்னமாகக் கொண்ட ஐ.நா. கொடி, தேசியக்கொடி ஏற்றும் இடத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு கொடி கம்பத்தில் ஏற்றி மரியாதை செய்யப்பட்டு பறக்க விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்