உக்கிர மகா காளியம்மன் ஊஞ்சல் உற்சவம்

உக்கிர மகா காளியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

Update: 2022-09-16 18:54 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உக்கிர மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 14-ந் தேதி அம்மன் திருநடன திருவிழா தொடங்கியது. இதில் முக்கிய வீதிகளில் அம்மன் திருநடன வலம் வந்தது. 2-ம் நாள் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு பொன்னூஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் அம்மன் ஒய்யாரமாக அமர்ந்து ஊஞ்சல் பாட்டுகளை கேட்டு மகிழ்ந்து ஆடும் வகையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த காட்சி, அங்கு கூடியிருந்த பொதுமக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் கோடாலிகருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொன்னூஞ்சல் உற்சவ விழாவில் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள், கிராம நாட்டாமைகள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்