திம்பம் மலைப்பாதையில் சாலையை கடந்த உடும்பு
திம்பம் மலைப்பாதையில் உடும்பு சாலையை கடந்தது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று சுமார் 4 அடி நீளமுள்ள உடும்பு சாலையை மெதுவாக கடந்த சென்றது. இதை கண்டதும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தினர். மேலும் சாலையை கடந்து சென்ற உடும்பை வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சாலையை கடந்து வனப்பகுதிக்குள் உடும்பு சென்றதும், வாகனங்கள் ஒன்றன் ஒன்றாக சென்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'வனச்சாலையை வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனத்தை திம்பம் மலைப்பாதையில் ெமதுவாக இயக்க வேண்டும்,' என அறிவுறுத்தி உள்ளனர்.