உடுமலை ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்

Update: 2022-12-24 16:52 GMT


பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் நேற்று பயணிகள் கூட்டம் விடுமுறை நாட்களில் கூடும் கூட்டத்தைவிட அதிம் இருந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பயணிகள் கூட்டம்

கேரள மாநிலம்பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து பாலக்காடுடவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் வரை விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், உடுமலை வழியாக பாலக்காடுக்கும் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை தினசரி உள்ளது.பாலக்காட்டில் இருந்து காலை புறப்படும் ரெயில் பொள்ளாச்சி வழியாக உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 7.10 மணிக்கு வந்து செல்லும்.இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதுவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

அதனால் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பயணிகளுக்கும் உட்காருவதற்கு இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டுதான் செல்கின்றனர். இந்த ரெயில் பழனிக்கு சென்றதும், அங்கு சில பயணிகள் இறங்கும்போது, அருகில் நின்று கொண்டு பயணம் செய்து வரும் சிலருக்கு மட்டும் உட்கார இடம் கிடைக்கிறது. இந்த நிலையில் பழனி ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயிலுக்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இரண்டு மடங்கு பயணிகள் கூட்டம்

இந்த நிலையில் நேற்று காலை பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் உடுமலைக்கு வந்த போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் நின்று கொண்டே வந்தனர்.இந்த நிலையில் இந்த ரெயிலில் செல்வதற்காக உடுமலை ரெயில் நிலையத்தில் 400-க்கும் மேற்பட்ட பயணிகள்காத்திருந்தனர். ரெயில் வந்ததும், பெட்டிகளில் இருக்கை உள்ளதா என்று பார்த்தனர்.ஆனால் ஏற்கனவே அந்த பெட்டிகளில் பயணிகள் நின்று கொண்டு வந்தனர்.அதனால் உடுமலை ரெயில் நிலையத்தில், பயணிகள் ரெயிலில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். முண்டியடித்துக்கொண்டு ரெயிலில் ஏறினர்.பயணிகள்கூட்ட நெரிசலில் நின்று கொண்டே பயணம் செய்தனர். படிக்கட்டு அருகிலும் நின்று கொண்டு பயணம் செய்தனர். இந்த ரெயிலுக்குசனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைநாட்களில் இருக்கும் கூட்டத்தைவிட நேற்று அதிக கூட்டம் இருந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் ரெயிலிலும் எப்போதும் பயணிகள் கூட்டம் உள்ளது. அதனால் பயணிகள் வசதிக்காக பாலக்காடு-திருச்செந்தூர் சென்று வரும் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

டிக்கெட் கவுண்டர்

நேற்று டிக்கெட் கொடுக்குமிடத்தில், திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் செல்வதற்கு திடீரென்று பயணிகள் கூட்டம் அதிகமாக கூடியது. ஒரே நேரத்தில் அதிக கூட்டம் கூடியதால், டிக்கெட் கொடுக்கும் ஊழியர் சிரமத்திற்குள்ளானார்.அதனால் உடுமலை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு டிக்கெட் கவுண்டரை திறக்கவேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்