உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திசையன்விளையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திசையன்விளை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திசையன்விளையில் கொண்டாடப்பட்டது. திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன் வழங்கினார். முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.