உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பாளையங்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-28 19:23 GMT

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், பாளையங்கோட்டை யூனியன் தலைவருமான கே.எஸ்.தங்கபாண்டியன் தலைமை தாங்கி, பிரியாணி வழங்கினார்.

பாளையங்கோட்டை மத்திய ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்