திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்
திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை மீண்டும் நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம். துணை செயலாளர்களாக ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம்.
திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.