காட்பாடி வரை மட்டும் இயக்கப்பட்ட இரண்டு ரெயில்கள்

தண்டவாள பராமரிப்பு பணியால் காட்பாடி ரெயில் நிலையம் வரை மட்டும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் சென்னை செல்லும் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2023-05-09 19:12 GMT

தண்டவாள பராமரிப்பு பணி

காட்பாடி அடுத்த அன்வர்த்திகான் பேட்டையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நேற்று நடந்தது. இன்றும் பணிகள் நடக்கிறது.

அதையொட்டி மைசூரிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பகல் 12.10 மணிக்கு காட்பாடிக்கு வந்தது. அந்த ரெயில் காட்பாடியில் நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு செல்லும் பயணிகள் காட்பாடியில் இருந்து வேலூர் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சென்னை சென்றனர்.

பயணிகள் அவதி

அதேபோல கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து வந்த பயணிகள் சென்னைக்கு பஸ் மூலம் புறப்பட்டு சென்றனர்.

மாலை 4.30 மணிக்கு காட்பாடியில் இருந்து பெங்களூருக்கு லால்பார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. 6.20 மணிக்கு கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் சென்னைக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்தனர். அரக்கோணத்தில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் யூனிட் ரெயில் காலை வேளை மட்டும் இயக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்றும் (புதன்கிழமை) தொடரும் என ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்