நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - இருவர் படுகாயம்

காரையூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-03 16:49 GMT


திருப்பத்தூர் மாவட்டம்,காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம் (வயது 57). இவர் கட்டிடப் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ரூபிஏவாஞ்சலின்.இவர் தனது உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக தனது காரில் திருச்சி சென்றுள்ளார்.திருமணம் முடிந்த பின் இருவரும் திருப்பத்தூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காரையூர் அருகே சோழம்பட்டி விலக்கு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்கு உள்ளானது.இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்