பஸ்சில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய 2 பேர் கைது

மயிலாடுதுறையில், பஸ்சில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-21 17:44 GMT
மயிலாடுதுறையில், பஸ்சில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ்சில் நகை திருட்டு

மயிலாடுதுறை கூறைநாடு தனியார் சாலியர் தெருவை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 70). இவர் கடந்த 16-ந் தேதி மனைவி சுகன்யாவுடன் கூறைநாடு செங்கழுநீர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி காமராஜர் பஸ் நிலையம் சென்றார். அங்கிருந்து அங்குள்ள வங்கிக்கு சென்றார்.

வங்கியில், தனது கைப்பையை சுகன்யா திறந்து பார்த்தபோது அதிலிருந்த 3 பவுன் நெக்லஸ் மற்றும் வங்கி லாக்கர் சாவி திருட்டு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் வந்தபோது யாரோ அவரது நகை மற்றும் வங்கி லாக்கர் சாவியை திருடியது தெரிய வந்தது.

பெண் உள்பட 2 பேர் கைது

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் சுகுமாறன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பஸ் வந்த வழித்தடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இந்தநிைலயில் சுகன்யாவின் கைப்பையில் இருந்து நகையை திருடியது, மதுரை அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த விகடகவி மகன் உதயசெல்வம் (34), புதுச்சேரி திருக்கானூர் அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் மனைவி சைலோ (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து உதயசெல்வம், சைலோ ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகை மற்றும் வங்கி லாக்கர் சாவி மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்