தூத்துக்குடிவ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
மோகா புயல்
வங்கக்கடலில் உருவாகி உள்ள மோகா புயல் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு, தென்மேற்கு திசையில் நிலை கொண்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்று உள்ள மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை கூண்டு
அதே போன்று வங்கக்கடலில் புயல் உருவாகி இருப்பதை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று காலையில் இருந்து கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுத்தது. மதியத்துக்கு பிறகு திடீரென லேசான காற்று வீசத் தொடங்கியது. அதே போன்று வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு வந்து வெயிலை விரட்டியடித்தன. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.