தூத்துக்குடிசங்கரராமேசுவரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது.
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் உள்ள உண்டியில் 6 மாதத்துக்கு ஒருமுறை எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று கோவிலில் உள்ள உண்டியல்களை எண்ணப்பட்டன.
இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் ருக்மணி, கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணிகள் நடந்தன. இதில் மொத்தம் ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 433 பணம், 32 கிராம் தங்கம், 240 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.