தூத்துக்குடிமத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு ஜனாதிபதி விருது

தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-30 18:45 GMT

மத்திய மறைமுக வரி வாரியம், சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு உள்ளது. இதில் அச்சுறுத்தல்களை கடந்து, துணிவுடன் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள், அலுவலர்களின் சிறப்பான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய வருவாய்புலனாய்வு பிரிவில் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளிக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு உள்ளது. இவர் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு ஜனாதிபதிவிருது வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்ற முரளியை சுங்கத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்