தூத்துக்குடி யூனியன் குழு கூட்டம் : தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா

தூத்துக்குடி யூனியன் குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Update: 2023-10-25 18:45 GMT

தூத்துக்குடி யூனியன் குழு கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாயத்து யூனியந் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு யூனியன் குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, யூனியன் குழு துணைத் தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஆர். நர்மதா, தனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்