தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்; மேயர் பேட்டி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பழைய பஸ்நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் என்.பி.ஜெகன் தெரிவித்துள்ளார்.;

Update:2023-07-30 00:15 IST

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பழைய பஸ்நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் என்.பி.ஜெகன் தெரிவித்துள்ளார்.

மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நடைபெறும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மேயர் என்.பி. ஜெகன் ஆய்வு செய்து வருகிறார். மேலும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரூ.52 கோடி மதிப்பீல் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல அடுக்கு மாடி கட்டிடத்துடன் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய பஸ்நிலையத்தை மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைவில் திறக்கப்படும்

அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பஸ்நிலைய பணிகளானது நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பஸ்நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த வளாகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் முறையாக செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், பொறியாளர் பாஸ்கர், ரமேஷ் மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்