தூத்துக்குடி முத்தம்மாள்காலனி பொதுநலச்சங்க ஆண்டு விழா

தூத்துக்குடி முத்தம்மாள்காலனி பொதுநலச்சங்க ஆண்டு விழா நடந்தது.

Update: 2022-10-05 18:45 GMT

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்க 18-வது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் தங்கராஜா தலைமை தாங்கினார். கே.பாலசுப்பிரமணியன், என்.சண்முகராஜ் ஆகியோர் வரவேற்றனர். வரவு செலவு அறிக்கையை சண்முகசுந்தரம் சமர்ப்பித்தார். முன்னாள் தலைவர் எம்.ஆறுமுகம், சுப்புலட்சுமி பொன்ராஜ், சங்க நிறுவனர் மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பேராசிரியர் மா.முரளி பேசினார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக தங்கராஜா, செயலாளராக தமிழ்ச்செல்வன், பொருளாளராக சண்முகசந்தரம், துணைத்தலைவர்களாக பாலசுப்பிரமணியன், சுடலையாண்டி, துணை செயலாளர்களாக நாகராஜ், முருக லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். வத்சலா தேவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்