பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது - அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-27 08:52 GMT

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது. கட்டண உயர்வு குறித்த ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்